பாணந்துறை விபத்தில் வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

களுத்துறை, பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி, வகவத்த சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இரத்தினபுரியிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த கார், பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மோதியதில் குறித்த மோட்டார் சைக்கிள், பின்னால் வந்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஹொரன வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்தார்.

மஹஹேன, ஹொரன பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக ஹொரண வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்து.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை! ஹக்கீம் குழுவினர் முடிவு

Leave a Reply