கொழும்பு, செப் 7
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகளின் கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் காலாவதியாகும் என சபாநாயகர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
ஆபத்து அதிகரிக்கும் முன் இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சுகாதார அமைச்சகம் மீண்டும் மீண்டும் கூறு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் தீவிரத்தை வெளிக்காட்டி தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்ட சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.