இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் இனி பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சட்டவிரோதமான செயல் மிகவும் நுட்பமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.