100 கோடி சொத்துக்களைக் கொண்ட அரசியல்வாதி யார் என்பதை உடனடியாக பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கள பத்திக்கையொன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மே 9 வன்முறையின்போது எரிக்கப்பட்ட தமது வீட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 100 கோடி ரூபா இழப்பீடு கோரியுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிய சாணக்கியன் எம்.பி. 100 கோடி பெறுமதியான சொத்துக்களை கொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் யார்? அவரது தொழில் என்ன? அவர் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளாரா? என்பது குறித்து பாராளுமன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பிற செய்திகள்