
இலங்கையர்களாக இன்று ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் ஒன்று கூடி இருக்கின்றோம்.நாளை நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது மகா நாட்டில் இலங்கை சம்மந்தமான பிரேரனைகள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் இடம்பெற்றுவரும் கவனயீர்ப்பு போhட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் இளைஞர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
இலங்கையில் மனித உரிமையை வலிறுத்தி இலங்கை அரசாங்கத்தினுடைய எதிர் அதிகாரத்திற்கு எதிராகவும் ,இலங்கையில் இருக்கின்ற சட்ட விரோத கைதிகளுக்கு எதிராகவும் இன்று ஐரோப்பாவில் வாழுகின்ற மக்கள் ஒன்று சேர்த்து இந்த ஆர்ப்பட்டத்தினை நடாத்தி இருந்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் நாளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.அது அல்லாமல் இலங்கையர்கள் நாளை பலர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராக உரை நிகழ்த்துவதற்கு இருக்கிறார்கள்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இருந்தார்கள்.நாளையும் இதே போல பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என நம்புகிறோம்.
அரசாங்கத்திற்கு நாங்கள் கூறுவது என்னவெனில் இந்த நாட்டில் அநீதி இல்லாமல் ஜனநாயகத்தை வலியுறுத்தி கருத்துக் சுதந்திரத்தினை வலிறுத்தி மக்களை சுதந்திரமாக வாழ வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்.என்றார்.
பிற செய்திகள்





