கடந்த 20 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 இலட்சம் இலங்கையர்!

கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக குடிவரவு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், குடிவரவு பிரதிக் கட்டுப்பாட்டாளர் திருமதி பியும் பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரை 1,013,992 பேர் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 1,050,024 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் திருமதி பியும் பண்டார தெரிவித்தார்.

இலங்கை பிரஜைகளில் 4,497,122 பேர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வோர் மற்றும் குடும்பங்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வோர் தொகை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுப்பு ஐந்து வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் அவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply