இலங்கையில் இருந்து சீனா பயணித்தவருக்கு கொரோனா!

இலங்கையில் இருந்து சென்ற சீன பிரஜை ஒருவருக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக ஷாங்காய் (சீனா) சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

சீன ஊடகங்களின்படி, வெளிநாடுகளுக்கு சென்று வந்த எட்டு பேரில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவராவார்.

“முதல் நோயாளி இலங்கையிலிருந்து செப்டம்பர் 10 ஆம் திகதி ஷாங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனர்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனையவர்கள் நியூசிலாந்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் கனடாவில் இருந்து சீனாவுக்கு வந்துள்ளனர்.

அனைத்து நோயாளிகளும் சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் அவர்களுடன் அதே விமானங்களில் நெருங்கிய தொடர்பு கொண்ட 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply