
கொழும்பு,செப் 15
கொழும்பு புறக்கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலும் ஒரு புகையிரத சேவையை ரம்பிக்க புகையிரத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மாலை 7.20 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள புகையிரதம் அதிகாலை 05.03 அளவில் பதுளை புகையிரத நிலையத்தினை சென்றடையும்.
பதுளையில் மாலை 7.30 இற்கு புறப்படும் புகையிரம் அதிகாலை 5.28 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினை வந்தடையும்.
மேலும் இரவு நேர தபால் சேவை புகையிரதம் நாளாந்தம் இரவு 8.30 அளவில் பதுளையிலிருந்து புறப்படவுள்ளதோடு, முற்பகல் 7.32 இற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினை வந்தடையும்.
மேலும் மாலை 6.05 அளவில் கொழும்பிலிருந்து புறப்படவுள்ள புகையிரதம் மறுதினம் அதிகாலை 5.24 அளவில் பதுளை புகையிரத நிலையத்தினை சென்றடையும்.





