
கண்டி, செப் 15
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த நகரங்களுக்கு இடையேயான கடுகதி ரயிலால் யாகொட நிலையத்துக்கு அருகில் காருடன் மோதியது. இந்தச் சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
ரயிலால் மோதப்பட்ட குறித்த கார், ரயில் தரிப்பு மேடை வரை இழுத்து வரப்பட்டது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை





