மலையகத்திலுள்ள மஸ்கெலியா பிளாண்டேஷன் மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.அவர்களுக்கான சம்பளம் முழுமையாக வழங்கப்படவில்லை.
அத்துடன் தொழிலாளிகளை அராஜகமான முறையில் முகாமையாளர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழில் அமைச்சிடம் முறைப்பாடு செய்திருக்கின்றோம்.இதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது இவ்வாறு தொடர்ந்து இடம்பெற்றால் மற்றைய கம்பெனிகளிலும் இவ்வாறு நடப்பதற்குரிய சந்தர்ப்பம் உள்ளது.மலையகத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகமா இருக்கிறது.
food supply முறையாக சேர்வதற்கு டீசல்,பெற்றோல் பிரச்சனை இருக்கிறது.பொருளாதாரத்தில் அதிக விலையில் பொருட்கள் மலையத்திற்கு விற்கப்படுகிறது .இதனால் அவர்களுக்கு வருமானம் குறைவாகவே காணப்படுகிறது.
உணவுத் தட்டுப்பாடு மலையகத்திற்கு கூடுதலாக உள்ளது.இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை அரசாங்கத்திடமும்,வெளிநாட்டு அரசாங்கங்களுடனும்,தூதரகங்களோடும் கலந்துரையாடி இந்தியாவினால் அரசி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனவே இதற்கு நிரந்தமான தீர்வினை இலங்கை அரசாங்கம் பெற்றுத்தர கேட்டு அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது என்றார்.
பிற செய்திகள்





