கோப்பாயில் கோரவிபத்து: முதியவர் மீது ஏறிய டிப்பர்!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி குணராசா என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது வாகனம் ஏறியதில் முதியவர் படுகாயமடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிஞ்சாக்கேணி படகு விபத்து. அரசாங்கத்துக்கு நேரடி தொடர்பு இல்லை! ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

Leave a Reply