கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட இன்று முதல் மக்களுக்கு வாய்ப்பு!

கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட இன்று(வெள்ளிக்கிழமை) முதல் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 400 முதல் இரண்டாயிரம் பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் 500 ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் கட்டணங்களில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 200 ரூபாயெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 20 அமெரிக்க டொலராகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடலாம்.

கொழும்பு தாமரைக் கோபுரம் நேற்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply