19ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான, பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும்!

எதிர்வரும் 19ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருநாள் மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன்கூட்டிய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 19ஆம் திகதி சேவைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ளாதவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply