உங்கள் அரசியல் விளையாட்டுக்காக நினைவேந்தலை கொச்சைப்படுத்தாதீர்கள்! உறவுகள் கோரிக்கை

புனிதமாக நினைவு கூர வேண்டிய தியாகி திலீபனின் நினைவேந்தலை, அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை கோரிக்கை விடுத்துள்ளார்.

நினைவேந்தல் தொடர்பில் ‘சமூகம் மீடியா’வுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாகி தீபம் திலீபனின் நினைவு வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அஞ்சலிகளை பொது மக்கள் சார்பில் ஒன்றாக சேர்ந்த மேற்கொள்ள வேண்டும்.

நினைவேந்தும் இடத்தில நீ, நான் என்று சண்டை பிடிக்கக்கூடாது. இவ்வாறு சிலர் நடந்து கொண்டது எமக்கு பிடிக்கவில்லை.

திலீபனின் கோரிக்கைகள் தியாகங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பொது மக்களுக்கு பின்னால் நின்று நிகழ்வுகளை வழிநடத்தி, ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

திலீபனின் வழியில் நாம் செல்ல வேண்டும். அதை எமது இளம் சமுதாயத்துக்கும் கொடுக்க வேண்டும். நீங்கள் இவ்வாறு சண்டை போடுவது என்றால் இந்த விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply