75ஆவது சுதந்திர தினம்; புதுமையான முறையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்! – பிரதமர்

பெப்ரவரி 4 ஆம் திகதி 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் அதிகாரிகளுக்கு, வரலாற்று நிலை மற்றும் பெருமையை கருத்திற்கொண்டு தேசிய நிகழ்வை ஒழுங்கமைக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.

புதுமையான முறையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். 2023 ஆம் ஆண்டு 75 ஆவது சுதந்திர தின நினைவேந்தலுக்கான குழுவின் உறுப்பினர்களின் வகிபாகம் தொடர்பாக அண்மையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திரத்தின் 75 ஆவது வருடமானது சிறப்பானதொரு சந்தர்ப்பம் எனவும், தேசிய விழாவின் அனைத்து நடவடிக்கைகளையும் சுதந்திர வரலாற்றை உள்ளடக்கிய புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் குறைந்த செலவில் நடத்த அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வை புதிய முறையில் கொண்டாடுவதற்கு ஜனாதிபதியும் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply