ஐ.நாவில் பொய் கூறும் அரசு; தமிழர்களை கண்முன்னே கொடுமைப்படுத்துகிறது! – கோமகன்

நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்று கூறிக்கொண்டு, கண்ணுக்கு முன்னால் இலங்கை அரசு தமிழர்களை கொடுமைப்படுத்துகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உறவுகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 பேர் மகசின் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 நாட்களாக போராட்டம் தொடர்கிறது. அவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை. இது அடிப்படை மனித உரிமை மீறல். ஐ.நாவில் மனித உரிமை பற்றி பேசும் இலங்கை அரசு, இங்கே தமிழ் மக்களுக்கு என்ன செய்துகொண்டு இருக்கிறது.

ஆகவே சிறையில் உள்ளவர்களின் உறவுகள் இங்கே போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதை இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும்.

சாப்பிடாமல் இருப்பது என்பது எவ்வளவு கொடுமை. சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் பிணை வழங்கி என்றாலும் விடுதலை செய்ய வேண்டும் என நாமும், உறவுகளும் கேட்டுக்கொள்கின்றோம்.- என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply