இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இணக்கம்

<!–

இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இணக்கம் – Athavan News

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் மீண்டும் மாஸ்கோ மற்றும்
இலங்கைக்கு இடையில் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஒன்றை தடுத்து வைக்குமாறு இலங்கை வர்த்தக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து ஜூன் 2ஆம் திகதி முதல் இலங்கைக்கான ஏரோஃப்ளோட்டின் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply