கிராமத்துக்கு கிரிக்கெட்: ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய திட்டம்

கொழும்பு, செப் 16

திறமைகளை கொண்ட வீரர்களை அடையாளம் கண்டு, இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் ஒன்றினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய வளர்ச்சிப் பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் கிராமத்து கிரிக்கெட் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டம் பொலனறுவை மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply