மூன்று சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

<!–

மூன்று சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்! – Athavan News

கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய, 2022ஆம் ஆண்டு 22ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 23ஆம் இலக்க வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 24ஆம் இலக்க கைத்தொழில்பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும் இந்த மூன்று சட்டங்களும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்.

இந்தச் சட்டமூலங்கள் மூன்றும் கடந்த 08ஆம் திகதி விவாதம் இன்றி நாடாளுமன்றதில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply