சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் 22 வது நினைவு தினம்!

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் காலம் சென்ற மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இன் 22 வது ஆண்டு நினைவு தினம் மூதூர் – தக்வா நகர் பெரிய பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது அவரது ஈடேற்றத்திற்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மூதூர் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இவ் நினைவு தினம் இடம்பெற்றது.

இதில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூதூர் மத்திய குழு தலைவர் உமர் ஜவாத் உள்ளிட்டோரும்,பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply