இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பல மில்லியன் பணப்பரிசு

ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இலங்கை வலைபந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கியுள்ளது.

ஆசிய கிண்ணங்களை வென்ற இலங்கை கிரிக்கட் மற்றும் வலைபந்தாட்ட அணி வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது.

அபேக்ஸா புற்று நோய் வைத்தியசாலைக்கு 500,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஶ்ரீலங்கா கிரிக்கட் இந்த நன்கொடைகளையும் பணப்பரிசில்களையும் வழங்கியுள்ளது.

அணிகளையும் வீர, வீராங்கனைகளையும் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் பணப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply