சீதுவ விகாராதிபதி கொலை: கைதான பிக்குவுக்கு விளக்கமறியல்!

சீதுவ – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,சீதுவ – வேத்தேவ பகுதியிலுள்ள விகாரையின் விகாராதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த விகாரையில் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 15ஆம் திகதி அதிகாலை துபாய் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 18 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைதானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply