ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை-04 ஹாஜியார் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்னை கடந்த 08 நாட்களாக காணவில்லை என்று குடும்பத்தினர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளியான ஏ.ஐ. பாத்திமா சம்ஹா என்ற இப் பெண் 23 வயதுடையவர் என்றும் இவர் கடந்த 10.09.2022 திகதி வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு சென்று வருவதாக சென்ற குறித்த பெண் இன்று (17.09.2022) சனிக்கிழமை வரை வீடு திரும்பவில்லை.
இவர் காணாமல் போனது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இவரை கண்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 0652257709 என்ற இலக்கத்திற்கோ அல்லது அவரது குடும்பத்தாரின் இலக்கமான 0773727293 என்ற இலக்கத்திற்கோ தொடர்பினை ஏற்படுத்துமாறு குடும்பத்தார் பொதுமக்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.

பிற செய்திகள்





