கொலைக்கு ஒத்தாசை புரிந்த நால்வர் ஹெரோயினுடன் கைது – துப்பாக்கியும் மீட்பு

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள், இரு ஆண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கொனஹேன விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 21 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா கெப், 09 mm தோட்டாக்கள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 14ஆம் திகதி களனி – பட்டிய சந்தி குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கொலைச் சம்பவத்திற்கு இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே உதவியதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களில் ஆண்கள் இருவரும் வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்களாவர்.

மற்றைய பெண்கள் இருவரும் 34 மற்றும் 37 வயதுடைய மோதர உயன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply