திலீ­ப­னின் நினை­வேந்­தல்: பொதுக்கட்டமைப்பை உருவாக்க 7 பேர் கொண்ட ஏற்பாட்டுக்குழு

தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­து­வ­தற்­கான பொதுக்­கட்­ட­மைப்பு குழு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பாட்­டுக்கு முன்­னாள் போராளி பஷீர் காக்கா தலை­மை­யில் 7 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந் ­தலை பொதுக்­கட்­ட­மைப்பொன்றை உரு­வாக்கி அதன் ஊடாக நிகழ்வு ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆரம்ப கலந்­து­ரை­யா­டல் யாழ்ப்­பா­ணம் நாவ­லர் மண்­ட­பத்­தில் நேற்று சனிக்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது.

யாழ்ப்­பாண மாந­கர சபை மேயர் சட்­டத்­த­ரணி வி.மணி­வண்­ணன் தலை­மை­யில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் சிவில் அமைப்­புக்­க­ளின் தலை­வர்­கள், அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள், யாழ்ப்­பாண மாண­வர் ஒன்­றி­யப் பிர­தி­நி­தி­கள், மூத்த முன்­னாள் போரா­ளி­கள், மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர் என பல தரப்­பி­ன­ரும் கலந்து கொண்­ட­னர்.

கலந்­து­ரை­யா­ட­லில் கலந்து கொண்­ட­வர்­க­ளின் கருத்து பகிர்­வு­களை தொடர்ந்து முதல் கட்­ட­மாக பொதுக்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யும் மூத்த போரா­ளி­யான பஷீர் காக்கா தலை­மை­யில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குழு­வில் அர­சி­யல் ஆய்­வா­ளர் ஜோதி­லிங்­கம், யாழ். பல்­க­லைக்­க­ழக கலைப்­பீட மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் ஜெசிந்­தன், யாழ். மாந­கர சபை உறுப்­பி­னர் வ.பார்த்­தீ­பன், குர­லற்­ற­வர்­க­ளின் குரல் அமைப்­பின் தலை­வர் மு.கோம­கன், முன்­னாள் அர­சி­யல் கைதி­யான அர­விந்­தன், முன்­னாள் போரா­ளி­யான செழி­யன் ஆகி­யோர் உள்­ள­டங்­கி­யுள்­ள­னர்.

இந்­தக் குழு­வா­னது எதிர்­வ­ரும் நாள்­க­ளில் மத­கு­ரு­மார்­கள், அர­சி­யல் கட்சி தலை­வர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளின் சங்­கங்­கள், பொது அமைப்­புக்­கள் என அனைத்து தரப்­புக்­க­ளு­ட­னும் சந்­திப்­புக்­களை மேற்­கொண்டு பொதுக்­கட்­ட­மைப்­பின் உரு­வாக்­கம், அதன் நோக்­கம், எதிர்­கா­லத்­தில் அதன் செயற்­பா­டு­கள் என்­பன தொடர்­பில் எடுத்­துக்­கூறி அவர்­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து முழு­மை­யான பொதுக்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வார்­கள் என கலந்­து­ரை­யா­ட­லில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

Leave a Reply