களனி துப்பாக்கி சூடு: சந்தேக நபர்கள் நால்வர் கைது

களனி,செப் 18

களனி பட்டிய சந்தியில் “ஆஜி” என்ற நபரை கொலை செய்ய பயன்படுத்திய கைத்துப்பாக்கியுடன் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுடன் 21 கிராம் போதைப்பொருள், 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 121 மில்லிகிராம் போதைப்பொருள், நான்கு தோட்டாக்கள், 3 கைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 15, வெல்லம்பிட், கொழும்பு 15-மோதர உயன ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 34 மற்றும் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply