கனேடிய இலங்கை முஸ்லிம் மக்களுடன் கூட்டமைப்பினர் விசேட சந்திப்பு!

கனேடிய நாட்டிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அதனடிப்படையில், நேற்றுமுன்தினம் சுமார் 10க்கும் அதிகமான கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இலங்கை பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதனையடுத்து நேற்று இலங்கையை பிறப்பிடமாக கொண்ட, முஸ்லிம் மக்களை அங்கு சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த இரண்டு சந்திப்புகளின் போது, இலங்கை மக்களின் அரசியல் தீர்வு, வடக்கு கிழக்கில் தமிழ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிஞ்சாகேணி படகு விபத்தில் இறந்தவர்களுக்காக கிண்ணியாவில் இன்று துக்கதினம் அனுஸ்டிப்பு

Leave a Reply