யாழ்ப்பாணம் ஆறு கால் மடப்பகுதியில் கசிப்பு மற்றும் வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு கால் மடப்பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது சுமார் ஆறு போத்தல் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் வாள்களுடன் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





