தாய்வானில் நிலநடுக்கம்: உயிரிழப்புக்கள் ஏதுமில்லை

தாய்வானில் குறைந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட “டைடுங் கவுண்டி” எனப்படும் தென் கிழக்கு மலைநாட்டுப் பகுதியில் நேற்றைய தினம் 6.4 மற்றும் 6.8 ஆகிய ரிச்டர் அளவு நிலைகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் குறைந்தது 12 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்திருந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இறப்புக்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அடுக்குமாடி கடைகள் மற்றும் வீடுகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மிகவும் குறைவாக வாழும் பகுதி என்பதினால் உயிர்ச் தேசங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தாய்வானின் தென் கிழக்கு பகுதிகளுக்கு தொடர்ந்தும் 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்க எச்சரிப்புக்களை தொடர்ந்தும் விடுத்து வருவதாகவும், இதனால் மேற்படி பகுதிகளில் இருந்து சுமார் 600 பேர் வரையில் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply