இரண்டரை வருட ஊதியத்தை மக்களுக்கு வழங்கும் எம்.பி.

கொழும்பு, செப். 19: மாத்தறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருட ஊதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்கள் நலத்திட்டங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 120 இலட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply