
சீன ஆக்கிரமிப்பை மேற்கொண்டால் தாய்வானை பாதுகாக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தாய்வான் மீதான தமது கொள்கையில் சிறிதும் மாற்றம் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்தது போன்று இதில் செயற்படப் போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டிலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலமாக தாய்வானை கருதும் சீனா, அண்மைய நாட்களில் கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





