13 வது திருத்த சட்டத்தை தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

மட்டக்களப்பு, செப். 19: 13 ஆவது திருத்தச்சட்டத்தை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருர் இரா.துரைரெட்ணம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

அவர் மேலும் பேசுகையில் “மனித உரிமைமீறல், துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறித்து ஐ.நா.வில் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து இந்தியா மட்டுமே பேசியது.
இதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு 13 ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கடந்த 32 வருடங்களுக்கு மேலாக அதனை புறக்கணித்ததை போன்று அல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே தேர்தல், மாகாணசபை முறைமை, அதிகார பரவல் என தமிழ் மக்களுக்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply