நாட்டில் அதிகாரப் பகிர்வும் இராணுவ மயப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதும் அவசியம்- ஹரி வலியுறுத்து!

அதிகாரப் பகிர்வும் இராணுவ மயப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார் .

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . இலங்கையின் இராணுவம் பெரிதாக்கப்பட்டுள்ளது .

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவத்தை விட இலங்கை இராணுவம் இரண்டு மடங்கு பெரியது . சர்வதேச நாணய நிதியத்துக்கு இது குறித்து எழுதிய பின்னர் , வொஷிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது தெளிவான கொள்கை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள அவர் ,

கனடாவின் நிதியமைச்சர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோருடனான சந்திப்பின் போதும் இந்த ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு ஏற்பட்டதிலிருந்து தனது பேச்சுக்களின்போது இராணுவமயப்படுத்தல் , நாட்டை மீண்டும் நிலையான பொருளாதாரப் பாதைக் குக் கொண்டு செல்வது எப்படி என்பது குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

நாட்டை மீண்டும் நிலையான பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்வது என்பது வடக்கு கிழக்குக்கு முழுமையாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலிருந்து உருவாக வேண்டும் என்றும் ஹரி ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார் .

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது . வடக்கு – கிழக்கு தனது தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கு சுயாட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ள ஹரி ஆனந்த சங்கரி வடக்கு – கிழக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளதையும் , இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வடக் கு – கிழக்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.6 வீதமே பங்களிப்பு வழங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் .

பிறசெய்திகள்

Leave a Reply