ஆணைக்கோட்டையில் கசிப்பு மற்றும் வாள்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் , 50 லீட்டர் கோடா மற்றும் 03 வாள்கள் என்பவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன் போது அங்கிருந்து 08 லீட்டர் கசிப்பு , கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் , உபகரணங்கள் , 50 லீட்டர் கோடா மற்றும் 3 வாள்கள் என்பவற்றை மீட்டதுடன் , அங்கிருந்த 38 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *