300 கிராம சேவையாளர்களுக்கு இவ்வாண்டு ஓய்வு

கொழும்பு, செப் 19

அரச மற்றும் அரை அரச ஊழியர்களுக்கு 60 வயது வரையிலான ஓய்வூதிய வயது வரம்பிலிருந்து இந்த ஆண்டு (2022) டிசம்பர் 31 ஆம் திகதியுடன் சுமார் 300 கிராம அலுவலர்கள் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதினான்காயிரத்து இருபத்தி இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் இருந்த போதிலும், தற்போது பதினோராயிரத்து எழுநூறு அதிகாரிகளே உள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அத்துல சிலமன் ஆராச்சி தெரிவித்தார்.

எனினும் இந்த வருடத்தில் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஓய்வு பெறுவதால் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதால், ஒரு கிராம அலுவலர் தனது சொந்தக் களம் மட்டுமின்றி வேறு பல களங்களிலும் பணிபுரிய வேண்டியுள்ளது என்றும், அந்தப் பணிகளைச் செய்வதில் பெண் அலுவலர்கள் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *