<!–
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கும் என சிலர் கூறினாலும் ஐந்து வருடங்களில் அதனைச் செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உணவு, மருந்து மற்றும் பால் மாவைத் தவிர மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளன என்றும் அவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணியில் ஜனாதிபதிக்கு உதவ தாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


