கருவாடு பதனிடும் இயந்திரம் டக்ளஸால் வழங்கி வைப்பு

மன்னார், செப். 19

அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கிராமத்தை சேர்ந்த மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடும் இயந்திரத்தினை வழங்கி வைத்ததுடன், கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

குறிப்பாக கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பண்ணைகள் வழங்குவதை விரைவுபடுத்துவது உட்பட பல்வேறு தொழில்சார் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இலுப்பைக்கடவை கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதுடன், கலந்துரையாடலுக்கான முன்னாய்த்தங்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *