IMF ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும்: பிரதமர்

கொழும்பு, செப். 19

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் நலன்களைக் கொண்ட சில தரப்பினர் சர்வதேச அமைப்புகளின் தலையீட்டை நாடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக சில நபர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு (UNHRC) முறைப்பாடு செய்யச் சென்றுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *