நாட்டில் நிலவும் எழுத்துபிழைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க தூதுவர்!

தென் மாகாணத்திற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், வீதியில் நிறுவப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அறிவிப்புப் பலகையில் “மயில்கள் முன்னே” என்றும், “அபாயகரமான மயில்கள் முன்னே” என்றும், சிங்களத்தில் “மயில்கள் காணப்படும் பகுதி” என்றும் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர், ஆபத்தான மயில்களை தாம் வாழ்நாளில் பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *