வியாழேந்திரனின் வருகைக்காக காத்திருந்த அதிகாரிகள்..!

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று உழுந்து, பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ்விதை தானியப் பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று (25) காலை 11.30 மணிக்கு இடம்பெறும் என அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், வருகை தராததால் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் , ஊடகவியலாளர்கள் என காத்து நின்றுள்ளனர்.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரம் பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் மேற்படி விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply