எலிசபெத் ராணியின் இறுதி நிகழ்வு! சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணியாருக்கு இறுதி மரியாதை செய்யப்படும் இடத்தில் புகைப்படப்பதிவு கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய ஜனாதிபதி Vahagn Khachaturyan மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த ராணியாருக்கான பொதுமக்கள் அஞ்சலி இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ராணியாருக்கான இறுதிச்சடங்குகள் பகல் 11 மணி முதல் முன்னெடுக்கப்படும்.

இந்த நிலையில், சிறப்பு விருந்தினர்களுக்கான பாதையூடாக ராணியாருக்கு மரியாதை செலுத்த சென்ற ஆர்மேனிய ஜனாதிபதி Vahagn Khachaturyan, ராணியாருக்கு மரியாதை செலுத்தும் காட்சியை புகைப்படமாக பதிவு செய்துள்ளதாக தகவல் வெலியாகியுள்ளது.

அவருடன் சென்றிருந்த அதிகாரி ஒருவர் தமது மொபைலில் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதேசமயம் பாதுகாப்புத் தேவைகள் மிகுந்த பகுதியில் அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் மக்கள் புகைப்படம் எடுக்கவோ, மொபைல் போன்கள் அல்லது பிற கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தவோ கூடாது என்று அரசாங்க வழிகாட்டுதல் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *