இரண்டாம் எலிசபெத் ராணிக்கு யாழில் அஞ்சலி!(படங்கள் இணைப்பு)

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து  எலிசபெத் மாகாராணிக்கு பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி மலர்மாலை அணிவித்ததுடன் எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி உரையினை ஆற்றினார்.

யாழ் -நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்துப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இதில் யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.விஷ்ணு வரதன்,உள்ளிட்ட கல்லூரி சமூகத்தினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள்,நினைவேந்தலினை செலுத்தினர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *