தம்மை தாக்கினால் வேறு எந்த வகையிலும் தாக்குவதற்கு தயார்

தம்மை தாக்கினால் வேறு எந்த வகையிலும் தாக்குவதற்கு தயார் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.

எனது ஆட்சிகாலத்தில் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்து 3.5 பில்லியன் ரூபாவையும், தற்போதைய ஜனாதிபதி 2020 ஆம் ஆண்டில் செலவு செய்த 1.5 பில்லியன் ரூபாவை ஒப்பிட்டு நான் பெருந்தொகை பணத்தை செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது காலத்தில் ஜனாதிபதி செயலகத்தினூடாக 7 பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வேலைத்திட்டங்கள் இன்று எந்தவொரு இடத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரியவில்லை.

விவசாயத்துறையில் இந்தளவு பிரச்சினை ஏற்பட்டமைக்கு அமைச்சர் மஹிந்தானந்தவே காரணம் . கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமைக்கு இதுவே காரணம் .

தகவல்கள் இருக்கிறது வெளியிடுவோம் என்று கூறுகிறீர்கள் தகவல்கள் இருப்பதாயின் அதனை வெளியிடுங்கள்.

தனது தலைவரை உசுப்பேற்ற மஹிந்தானந்த பொய்களை சொல்லக் கூடாது.

எங்களாலும் அடிக்க முடியும்.ஆனால் நாங்கள் அப்படி அபத்தமாக நடக்கமாட்டோம். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிய தமக்கு விருப்பம் இல்லை – என்றார்.

Leave a Reply