கோஸ்டாரிகாவில் பஸ் விபத்து: 9 பேர் பலி

கோஸ்டாரிகா,செப் 19

கோஸ்டாரிகா நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தலைநகர் சான் ஜோஸிலிருந்து 70 கிமீ தொலைவில், நாட்டின் மேற்கில் உள்ள கேம்ப்ரோனெரோ பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கனமழையால் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியிருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழக்கும் இந்த நிலைமை மிகவும் சோகமானது மற்றும் கவலை அளிக்கிறது என்றும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும்படியும் கோஸ்டாரிகா ஜனாதிபதி ரோட்ரிகோ சாவ்ஸ் நேற்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *