நாட்டில் நிலவும் சீரற்றவானிலை – 14 பேர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், 22 பேர் காயம்!

நாட்டில் நிலவும் மோசமான சீரற்றவானிலை காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், 22 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

நாட்டில் நிலவும் மோசமான சீரற்றவானிலை காரணமாக 452 வீடுகள் பகுதியளவிலும், 56 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

Leave a Reply