
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட் டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது . இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையிலேயே அவரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
நேற்றுமுன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்திருந்த திரு கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர் .
திருகோணமலையில் தற்போது தமிழர் பிரதேசங்களும் , தமி ழர் வழிபாட்டு இடங்களும் திட்டமிட்டு பெளத்த மயமாக்கப்படும் நிலையில் அங்கு செயற்றிறன் மிக்க மக்கள் பிரதிநிதி ஒருவர் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் திரு கோணேஸ்வர ஆலயத்தின் காணிக ளைக் கையகப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்வைத்த அவர் கள் , சம்பவ இடத்துக்குச் சென்று நிலை மைகளை ஆராய்ந்து நடவடிக்கை களை எடுப்பதற்குரிய உடல் நலத்துடன் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளனர் .
இந்த நிலைமையால் திட்டமிட்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் . மூப்புக் காரணமாக உடல் நிலை தளர் வடைந்துள்ள இரா.சம்பந்தன் நாடாளு மன்ற அமர்வுகளில் சீராகக் கலந்து கொள்வதும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவுள்ளது . இதுவரை நடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் சிலவற்றிலேயே கலந்துகொண்டுள்ளார் .
அதனால் மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக சந்தர்ப்பங்களும் குறைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் இவை தொடர்பாகக் ஆராயப்பட்டு , இரா . சம்பந்தனிடம் பதவி விலகுவது தொடர்பாகக் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது .
வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , இலங்கைத் தமிழர சுக் கட்சியின் தலைவர் மாவை சோ . சேனாதிராசா , வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக் கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இரா.சம்பந் தனுடன் இந்தக் குழுவினர் கலந்துரையைாடி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்

