திருநாவற்குளத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதி

வவுனியா திருநாவற்குளத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக திருநாவற்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்புகுந்தமையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது இவ்வீடுகளில் வசிப்பவர்கள் உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினை மழை காலங்களில் தமக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply