ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் இரண்டு பேர் உயிரிழப்பு: 90பேர் காயம்!

ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 90பேர் காயமடைந்துள்ளனர்.

‘நன்மடோல் புயல்’ என்ற மிகப்பெரிய புயல், தென்கோடியில் உள்ள கியூஷு தீவில் கரையைக் கடந்ததில் ஒன்பது மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மேலும் 350,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இந்த புயலைத் தொடர்ந்து, 24 மணி நேரத்தில் 400 மிமீ (16 அங்குலம்) மழை பெய்யும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

வெள்ளத்தில் கார் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் நிலச்சரிவில் புதைந்து இறந்ததாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டோக்கியோவில் கனமழை பெய்தது, வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக புல்லட் ரயில் சேவைகள், படகுகள் மற்றும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புயலின் தாக்கத்தை கண்காணிக்க, செவ்வாய்கிழமை வரை, ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்தவிருக்கும் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்வதைத் தாமதப்படுத்தினார்.

சுப்பர் சூறாவளி மணிக்கு 234 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இது நான்கு அல்லது ஐந்து வகை சூறாவளிக்கு சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *