எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் ​கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் (20) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த எட்டு இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *