இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தின் கிராமத்திலிருந்து உதைபந்துகள் வழங்கி வைப்பு!

தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்திற்கு நேற்றையதினம் ஒரு தொகை உதைபந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணேஸ் வித்தியாலய பாடசாலை அதிபர், உதைபந்தாட்ட பயிற்சியாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த பந்துகள் வுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்திற்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்மர் உமர் அவர்களின்
கிராமத்திலிருந்து உதைபந்தாட்டம் என்ற எண்ணக்கருக்கு அமைவாக இந்த செயற்திட்டம் நேற்று மாலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த, இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப பொருளாளரும் வவுனியா உதைபந்தாட்டத்தின் தலைவருமான அ.நாகராஜன் , உப தலைவர் புலேந்திரன், சுற்றுப்போட்டி குழு செயலாளர் பாலேந்திரன், உதைபந்தாட்ட பயிற்சியாளர் புவிதரன், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பாடசாலை உதைபந்தாட்ட வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *